Categories
சினிமா தமிழ் சினிமா

“பாலில் ஒரு சொட்டு விஷம் போல் எதிர்மறையான விமர்சனங்கள்”…. தவறு இருந்தால் தப்பிக்க முடியாது…. பார்த்திபன் வேதனை….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது.

ஓடிடியில் இரவில் நிழல் - பார்த்திபன் அறிவிப்பு | Dinamalar

இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய பிரகிடா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து பார்த்திபன் கூறியதாவது. இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் ரிலீசாகியுள்ளது. இந்த திரைப்படம் எந்த ஒரு பிரமோஷன் மற்றும் விளம்பரமும் இல்லாமல் ரிலீசானது. மேலும், இதிலிருந்த கமெண்ட்ஸ் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

பார்த்திபனை துரத்தும் இரவின் நிழல் Entertainment பொழுதுபோக்கு

அந்த கமெண்ட் மாறுவதற்கு 20 மணி நேரம் ஆனது. தற்போது இருக்கும் கமெண்ட்ஸ் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை மற்றும் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாலில் ஒரு சொட்டு விஷம் போல எதிர்மறையான விமர்சனங்கள் சீர்குலைத்து விடுவதாக கூறியுள்ளார்.

இந்த படம் சிங்கிள் ஷாட் நான் லீனியர் என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளது. விரைவில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும். இது சிரமமான ஒரு மேக்கிங். குற்றம் செய்தால் யாரும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |