Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் – பிரகாஷ் காரத் கோரிக்கை…!!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக விவசாயிகள் டிராக்டர் பேரணி, ரயில் மறியல் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுமாறு  டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன்  மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திரு பிரகாஷ் காரத் கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயிகள் டெல்லியில் 3 மாதங்களுக்கு மேலாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |