பாவம் கணேசன் தொடர்கதையில் நடித்து வரும் கதாநாயகி அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் தொடர்கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர்கதையில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவீன் கதாநாயனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை நேகா கௌடா நடித்து வருகிறார்.
இதற்கு முன்பாக நேகா சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு தொடர்கதையில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் நடிகை நேகா கௌடா தனது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது அவரது ரசிகர்களின் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.