கொரோனா சம்பந்தமான தடுப்புப் பணிகள் குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளது சிவசேனா கட்சி.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 4,287 மரணங்கள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாளாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதே நிலைமை நீடித்தால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது. மேலும் டெல்லியில் பல கோடி மதிப்பில் நடைபெறும் புதிய பாராளுமன்றம் பணிகளை நிறுத்த போட மோடி அரசு தயாராக இல்லை என்றும் பாஜகவை விமர்சனம் செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் தவறான கொள்கையால் சிறிய நாடுகளில் இடமெல்லாம் இந்தியா உதவி வாங்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். நேரு, இந்திரா காந்தியின் திட்டமிடல் காரணமாகத்தான் இந்தியா உயிர் பிழைத்து இருப்பதாக அந்த கட்சி தெரிவித்திருந்தது. கொரோனாவை கட்டுப்படுத்தாமல் புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமருக்கான புதிய வீடு ஆகியவற்றை அடுத்த ஆண்டு கட்டி முடிக்க வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.