திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளர் KN நேருவுக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்ட்டுள்ளது.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தின் திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் KN நேரு தலைமையினான மாவட்ட திமுக நல்ல வெற்றியை பெற்றது. அங்குள்ள 14 ஒன்றியங்களிலும் திமுகவின் கையே ஓங்கி இருக்கின்றது. மொத்தமுள்ள 241 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 152 இடங்களை கைப்பற்றியதில் திமுக 146 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வென்று அதிரடி காட்டின.
இந்நிலையில் தான் ஒட்டுமொத்த வெற்றியை பெற்று கொடுத்த அம்மாவட்ட செயலாளர் KN நேருவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.சுமார் 30 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வரும் கே என் நேருவுக்கு திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஆர் பாலு நாடாளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பு வகிப்பதால் அவருக்கு பதிலாக KN நேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.