நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்காக நிலத்தில் அறுவடை செய்து எடுத்து வைத்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்துள்ளது. இதனால் அங்கிருந்த 2 ஆயிரத்திற்கும் மேல் விற்பனைக்கு தயாராக இருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து நாசமாகிவிட்டது.
இவ்வாறு ஈரப்பதம் அடைந்த நெல் மூட்டைகளை தங்களால் விற்பனை செய்ய முடியாது என்று விவசாயிகள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். எனவே சேதமடைந்த நெல் மூட்டைகளை பாரபட்சமின்றி அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், பதருகள் முளைத்த நெல் மூட்டைகளை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஆவதாக விவசாயிகள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.