இருசக்கர வாகன விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சின்னச்சாயக்காரத் தெருவைச் சங்கர் என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் ஆரணி மண்டி வீதி வழியே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்ததால் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .