Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் ஏப்ரல்26, மே.3 அனைத்து கடைகளை மூடவேண்டும்..மாநகராட்சி அறிவுறுத்தல்..!!!

நெல்லை மாநகரில் ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26 மற்றும் மே 3 ஆம் தேதிகளில் அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

நெல்லை மாநகரத்தில் மட்டும் ஐந்து பகுதிகள் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சமூக விலகலை கடைபிடிப்பதற்காக நெல்லை மாநகராட்சி சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சமூக விலகல் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்கும் தீர்வு என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், வருகிற 26-ஆம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய இரு தினங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய அனைத்து கடைகளையும் மூடி வைக்க மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

100% பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அந்த இரண்டு நாட்கள் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு அறிவுறுத்திய நேரங்களில் தொடர்ந்து இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே நெல்லை மாநகராட்சியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு இரண்டு நாட்கள் வீதம், வண்ண, வண்ண அட்டைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அட்டையில் உள்ள நாட்களில் மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

Categories

Tech |