ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் கொரோனா ஊரடங்கால் கடந்த வருடம் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது கொரானா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வருடமும் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் ஆனித்தேரோட்டம் கடந்த 15 – ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு தினமும் காலையும், மாலையும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது.
இதனால் சுவாமிகள் நேற்று அம்பாள் சன்னதியில் கும்பம் வைத்தும், யாகம் நடத்தியும் வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தகோடிகள் அம்பாள் சன்னதி முன் தரிசனம் செய்துவிட்டு சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகர், அம்பாள், சுவாமி நெல்லையப்பர் போன்ற அனைத்து தேர்களையும் சுற்றி வந்தனர். இதனை அடுத்து சிவனடியார்கள் மற்றும் சில பக்தர்கள் சன்னதி முன் தேவாரம் பாடி வழிபட்டனர். மேலும் சில பக்தர்கள் கருப்பசாமி கோவிலுக்கும் சென்று வழிபட்டனர்.