தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் மரணத்தை தள்ளிப்போடலாம்…!
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் “சி” மற்ற பழங்களை விட அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் “சி” உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி ஏற்படும் இருமல் சளி காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் “சி” இந்த கொழுப்புகளை கரைத்து உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் நெல்லிக்காய் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த கூடியது.
இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அவற்றை நீக்கி இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
இதய தசைகளை வலிமையாக்கி அதிக அளவிலான ரத்தத்தை உடல் முழுவதும் அழுத்த உதவி செய்யும்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் புதிய செல்கள் உருவாகி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் அளவு நெல்லிக்காய் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும் தன்மை உடையது நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வரலாம்.
உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் எனவே சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
நெல்லிக்காய் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்க கூடியது.
தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுவடைய, பற்களை வலிமை பெற மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காயை மென்று சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
தினமும் சாப்பிட்டபின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் பார்வை மேம்படுவதோடு கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண் சிவப்பது போன்றவை தடுக்கப்படும்
உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள, குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடல் சூட்டை தணிக்கலாம்.
வாரம் ஒரு முறை நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சி அதிகரிக்கும், முடி கொட்டுவதும் நிற்கும், முடியும் கருமையாக மாறும்.