Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நீண்டகால காதலியை கரம்பிடித்த நிக்கோலஸ் பூரான் ‘…! கிரிக்கெட் வீரர்கள் ,ரசிகர்கள் வாழ்த்து …!!!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நிக்கோலஸ் பூரான், தனது நீண்டகால காதலியை திருமணம் செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரரான  நிகோலஸ் பூரான் ,கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இந்நிலையில் 14வது ஐபிஎல் தொடரில்   கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில்  பஞ்சாப் அணியில் இடம்பெற்ற நிக்கோலஸ் பூரான்  6 போட்டிகளில் விளையாடி 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.அதோடு 4 முறை டக் அவுட்டாகி  ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார் .

தற்போது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் நிக்கோலஸ் பூரன் , நீண்ட நாட்களாக  காதலித்து வந்த அலிசா மிகுவல் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். தனது திருமண புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் பிரபலங்களும் , ரசிகர்களும்  நிகோலஸ் பூரானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |