2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டுக்கு நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது .இந்த நிலையில் சிலம்பரசன் புத்தாண்டை வரவேற்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியதாவது ,”என் பாசத்துக்குரிய அனைவருக்கும் வணக்கம் .நம்மில் பலரும் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம் .மேலும் பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டு இருப்பார்கள். அதோடு இழப்பையும், நன்மையையும் கடந்த ஆண்டு கடந்து வந்திருக்கிறோம். இறைவனின் பெரும் கருணையால் இந்த புதிய வருடத்தை காண இருக்கிறோம் .
தனிப்பட்டமுறையில் மாநாடு திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றியாக பரிசளித்த ஆண்டு இதுவாகும். மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆம் ஆண்டை முடிக்கின்றேன்.2022 ஆம் ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும், உங்களுக்கும் அமைய வேண்டிக்கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவனாக பார்க்கும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரை உலக சொந்தங்களுக்கும் , என்றென்றும் எனக்கு ஆதரவாக இருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்கள் , நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார் ” தற்போது இவர் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.