Categories
இந்திய சினிமா சினிமா

நீங்கள் ஆண்மான்…. அரிய வகை மான்…. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பதிவிட்ட வைரமுத்து…!!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இருக்கு ஆதரவாக வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் தடுக்க வேலை செய்கிறது’ என இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 11 வருடத்தில் 33 இந்தி படங்களை இசையமைத்து ஆஸ்கர் விருது பெறுவதற்கு முன்புவரை வட இந்தியாவில் கொடிகட்டி பறந்தார். ஆஸ்கர் விருது பெற்ற பிறகு அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. பாலிவுட்டில் அவரது பட வாய்ப்புகளை தடுக்க சதி நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ரகுமான் அஞ்சற்க. வட இந்திய கலையுலகம் தமிழ்நாட்டு பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர் வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |