Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நீங்களும் செய்யலாம் அருமையான சாக்லேட் கேக்..!!

நீங்களும் உங்கள் வீட்டிலே சாக்லேட் கேக் செய்து அசத்தலாம். இது மைதாமாவு இல்லாத சாக்கலெட் கேக் ஆகும்.

தேவையான பொருட்கள்:

வெண்ணேய்                                – 150 கி. வெண்ணெய்
மில்க் சாக்லேட்                           – 150 கி. மில்க் சாக்லெட்
சர்க்கரை                                        – 150 கி. சர்க்கரை
முட்டையின் மஞ்சள் கரு       – 4
காபி                                                  – 1,1/2  டீஸ்பூன்
பாதாம் பொடி                             – 80  கி.
முட்டையின் வெள்ளை கரு  – 4

செய்முறை:

முதலில் ஓவனை 180° செல்சியஸுக்கு முன்னாடியே  சூடுப்படுத்திக் வைத்து கொள்ளுங்கள்.  வெண்ணெய் மற்றும் சாக்லேட்டை ஒன்று சேர்த்து உருக்கி எடுத்து கொள்ளுங்கள். நன்றாக உருகியதும் அதை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் சர்க்கரை பாதியளவு எடுத்து அதை மஞ்சள் முட்டை கருவுடன் சேர்த்து ஒன்றாக நன்கு கலக்கி அடித்து கொள்ளுங்கள். நன்றாக கலக்கும்பொழுது வெள்ளை நிறத்தில் கிரீம் போல மாறிவிடும். பின்னர் அத்துனுடன் காஃபி, பாதாம் பொடி இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.

மீதிருக்கும் சர்க்கரையை எடுத்து வெள்ளை கருவுடன் சேர்த்து நன்றாக அடித்து முடித்தவுடன், அதனுடன் சாக்கலேட் கலவையும் சேர்த்து கலக்கி எடுத்து கொள்ளுங்கள். ஒரு 8”x 8” டிரேயில் இதைக் கலந்து, முன்னாடியே சூடுபடுத்தி வைத்திருக்கும் ஓவனில், 35 முதல் 45 நிமிடங்கள் வரை வைத்து விடவும். பின்னர் ஐஸ்க்ரீம் உடன் சேர்த்து அனைவர்க்கும் பரிமாறுங்கள். இப்பொழுது நீங்களே செய்த சாக்கலேட் கேக் ரெடி…!

 

Categories

Tech |