Categories
சினிமா தமிழ் சினிமா

‘நெஞ்சம் மறப்பதில்லை’… நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க… வைரலாகும் எஸ்.ஜே. சூர்யாவின் டுவீட்…!!!

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப் படத்தில் ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . கடந்த 4  வருடங்களுக்கு முன்னதாகவே உருவான இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தது. இதையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை படம் வருகிற மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது ‌.

இதனிடையே இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாக தகவல் வெளியானது . இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும், இந்த படத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார் . எனவே திட்டமிட்டபடி இந்த படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .

Categories

Tech |