Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில் பதற்றம்…. பேசிக்கொண்ட நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட்டுகள் …!!

நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  புஸ்பா கமல் தாஹல், துணைப் பிரதமர்  இஸ்வோர் போக்கரெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தற்போதைய அரசியல் சூழல், உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று நேபாளம் – சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான உறவு குறித்து பேசப்பட்டது.

இதில் பேசிய புஷ்பா கமல்தாஸ், வெளிநாட்டு பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய நிதி உதவிகளை நேபாளம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்திய நாட்டுடன் எல்லையில் பதற்றம் இருக்கும் சூழலில் இந்த கூட்டம் நடத்துவதற்கான அவசியம் என்னவென்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சில தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், ராஷ்டிரிய பிஜதான்திரா கட்சி தலைவருமான கமல் தாம்பா ”இந்த கூட்டம் கண்டனத்துக்குரியது. இது நவீன காலனியாதிக்க பயிற்சி” என்று கடுமையாக விமர்சித்தார்

Categories

Tech |