Categories
உலக செய்திகள்

22 நபர்களுடன் சென்ற நேபாள விமானம் மாயம்…. பயணிகளின் நிலை என்ன…?

இந்தியாவை சேர்ந்த 4 பேர் உட்பட 19 பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் மாயமான நிலையில், அது விழுந்த இடத்தை கண்டறிந்துள்ளனர்.

நேபாளத்தில் 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் என்னும் விமான நிறுவனத்தினுடைய இரண்டு எஞ்சின்கள் கொண்ட 9 NAET என்னும் விமானமானது, பொக்ரா எனும் பகுதியிலிருந்து ஜோம்சோம் என்ற நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதனைத்தொடர்ந்து இன்று காலையில் அந்த விமானமானது மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, விமானத்தை கண்டறியும் பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில் தற்போது அந்த விமானம் நேபாளத்தில் இருக்கும் மஸ்டங் என்னும் பகுதியில் இருக்கும் கோவாங் என்ற இடத்தில் விழுந்திருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. எனினும் பயணிகளின் நிலை என்ன ஆனது? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |