Categories
உலக செய்திகள்

கிடைக்கும் விமானத்தில் வெளியேறுங்கள்… உக்ரைனில் இருக்கும் மக்களுக்கு… நேபாள அரசு அறிவுறுத்தல்….!!!

நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, போர் பதற்றம் அதிகரித்திருப்பதால் உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

ரஷ்யாவின் பாராளுமன்றத்தில் உக்ரைன் நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் படைகளை பயன்படுத்துவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் இரு நகர்களை ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டிற்கு படைகளை அனுப்புவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது அந்நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் போர் படைகளை ரஷ்யா நகர்த்தி வருகிறது. எனவே, அங்கு போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதனால், இந்தியா போன்ற நாடுகள், உக்ரைனில் இருக்கும் தங்கள் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில், நேபாள அரசு, உக்ரைன் நாட்டில் இருக்கும் தங்கள் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்து, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, “உக்ரைன் நாட்டில் இருக்கும் நேபாளத்தை சேர்ந்த மக்கள் அங்கிருக்கும் நிலையை கருதி, கிடைக்கும் வணிக விமானங்கள் மூலமாக நாடு திரும்ப வேண்டும்.

மேலும், அந்நாட்டிற்கு செல்லும் திட்டத்தை முழுவதுமாக நேபாள மக்கள் தள்ளி வைக்க வேண்டும். 38-க்கும் அதிகமான நேபாளத்தை சேர்ந்த மக்கள், பெர்லினில் இருக்கும் நேபாள தூதரகத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |