Categories
மாநில செய்திகள்

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

 கல்லூரிகளில் நேரடி முறையில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான அறிக்கை தொடர்பாக யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியது. கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டது.

அதன்படி வாரத்தில் 3 நாட்கள் நேரடி வகுப்புகளும், 3 நாட்கள் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்றது. இந்த நிலையில் இனி கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என வெளியான அறிவிப்பை அடுத்து மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இதனைதொடர்ந்து உயர்கல்வித்துறை சார்பாக நேரடி தேர்வுகள் இன்னும் 2 மாதங்களுக்கு பின்னரே நடத்தப்படும் என்றும் மாணவர்கள் அதற்குள் விடுபட்ட பாடங்களை படிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தற்போது அனைத்துக் கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வு மட்டுமே நடத்தப்படும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளங்களில் வெளியான கடிதம் போலியானது என யுஜிசி தெரிவித்துள்ளது. மேலும் அதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் எந்த கடிதமும் வெளியாகவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. ஆகவே மாணவர்கள் குழப்பம் எதுவும் இன்றி வழக்கம்போல் உயர் கல்வித்துறை அறிக்கையை பின்பற்றி தேர்வுக்கு தயாராகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |