நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வரி செலுத்துவோர் மதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க கூடிய வகையில் ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.