இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் பிர்னிங்குடு பகுதியில் நேற்று முன்தினம் சாலையில் சென்று கொண்டிருந்த 2 தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது . இந்த விபத்தில் 2 பேருந்துகளும் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது . இதில் பேருந்துகளில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடந்தி வருகின்றனர் .மேலும் நைஜீரியாவில் மோசமான சாலை காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் .