வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து தர்மபுரிக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தர்மபுரி ஒட்டப்பட்டி அருகில் அவ்வைவழி பிரிவு பைபாஸ் சாலையில் வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் எ.ஜெட்டி அள்ளியை சேர்ந்த வேன் டிரைவரான சித்தன் மற்றும் காரில் வந்த தர்மபுரியை சேர்ந்த ஆனந்தன் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் சேலம்-தர்மபுரி பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.