Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“நெசவு தொழிலை மீட்க வேண்டும்” விரைவில் நடவடிக்கை எடுங்கள்…. நெசவாளர்களின் கோரிக்கை….!!

நெசவு தொழிலுக்கு மூலப் பொருட்களைக் கொடுத்து உதவுமாறு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிபேட்டையிலுள்ள சோளிங்கர் உள்பட 30-க்கும் அதிகமான கிராமங்களில் விசைத்தறி நெசவு தொழிலை நம்பி 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் சமீபகாலமாக நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தனியாரிடம் ஒப்பந்தம் செய்து பாவு எடுத்து நெசவு செய்து வரும் தொழிலாளர்கள் நூல் விலை உயர்வு காரணத்தால் சரிவர தங்களால் நெசவுத் தொழில் செய்ய தேவையான மூலப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலான நெசவாளர்கள் பாரம்பரிய தொழிலை விட்டுவிட்டு சமையல் வேலை மற்றும் செக்யூரிட்டி உள்ளிட்ட பல வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இது தொடர்பாக விசைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது, எங்களுக்கு இந்த தொழிலை விட்டால் வேறு எதுவும் தெரியாது. ஆனால் எங்களின் குடும்பத்தோடு சேர்ந்து உழைத்தும் போதுமான அளவில் வருமானம் கிடைக்கவில்லை. மேலும் கூலி உயர்வு கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

ஆதலால் விசைத்தறி நெசவு தொழிலை அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு உரம், மானிய கடன் மற்றும் விதை உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது போல் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து தனித்துறை அமைத்து அதிகாரிகளை நியமிக்க வேண்டுமாறும், நெசவாளர்களுக்கு கடன் வழங்க தனி வங்கி ஏற்படுத்த வேண்டும் மற்றும் மூலப்பொருட்களை கொடுத்து உதவ வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |