நெதர்லாந்து அரண்மனை வட்டாரங்கள் கொரோனா தொற்றால் முன்னாள் ராணியார் பீட்ரிக்ஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்து அரசரின் தாயார் பீட்ரிக்ஸிடம் ( வயது 83 ) கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அரண்மனை வட்டாரங்களும் முன்னாள் ராணியார் பீட்ரிக்ஸ் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை அன்று பட்டத்து இளவரசி அமலியா 18 வயதை எட்ட உள்ளார். இந்நிலையில் முன்னாள் ராணியார் பீட்ரிக்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அமலியாவின் பிறந்த நாள் விழாவில் அவரால் பங்கேற்க முடியாது.
இதற்கிடையே முன்னாள் ராணியார் பீட்ரிக்ஸ் நான்கு நாள் தொழில் முறை பயணமாக Curacao தீவுகளுக்கு சென்றுவிட்டு திங்கட்கிழமை அன்று திரும்பி வந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பீட்ரிக்ஸ் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியுடன் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளார். இந்நிலையில் Curacao தீவுகள் நிர்வாகம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தும் கூட ராணியார் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல் ஊடகங்களும் பல புகைப்படங்களில் ராணியார் பீட்ரிக்ஸ் மாஸ்க் அணியாமல் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளன.