Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான நெத்திலி மீன் குருமா சாப்பிட ஆசையா இருக்கா ….!!

                                                      நெத்திலி மீன் குருமா 

 

தேவையான பொருள்கள்

நெத்திலி மீன்-அரைக்கிலோ

வெங்காயம்- 2

தக்காளி- 2

இஞ்சி பூண்டு விழுது- ஒரு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை கொத்தமல்லி -தேவையான அளவு

எண்ணெய்- 5 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய்- 4

சாம்பார் பொடி- அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் -கால் தேக்கரண்டி

தேங்காய் பொடியாக நறுக்கியது-அரை கப்

உப்பு-தேவையான அளவு

தயிர் -அரை கப்

Image result for நெத்திலி மீன் குருமா

செய்முறை 

நெத்திலி சுத்தம் செய்து வைக்கவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். தேங்காய் ஓடு சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து அரைக்கவும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சிறிது கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதில் தக்காளி பச்சை மிளகாய் சிறிது கொத்தமல்லி சேர்த்து குழைய வதக்கவும் பின் தூள் வகைகள் உப்பு எல்லாம் சேர்த்து பிரட்டி தயிர் சேர்த்து கலந்து விடவும் எல்லாம் ஒன்றாக திரட்டி வரும்போது தேவையான அளவு நீர் விட்டு கலந்து கொதிக்கவிடவும் முழுமையாக போன பின் மீனை சேர்த்து மூடி வேக விடவும் மீன் வெந்ததும் தேங்காய் அரைத்து விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.

இப்போது சுவையான நெத்திலி மீன் குருமா தயார்

Categories

Tech |