தாய் என்பவள் தன்னுடைய குழந்தையின் மீது அளவுகடந்த அன்பும், அக்கறையும் வைத்திருப்பவர். தன்னுடைய குழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்காக தாய் என்ன வேண்டுமானாலும் செய்து முடிப்பதுண்டு. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய மகளை சந்தோஷப்படுத்துவதற்காக டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி இயற்கையாகவே உள்ள மல்லிகைப் பூவைப் போன்று அழகாக செய்து தன்னுடைய மகளுக்கு கொடுத்துள்ளார்.
இதனால் அவருடைய மகளும் சந்தோஷமாக இருந்துள்ளார். இது பார்ப்பதற்கு நிஜமாகவே இயற்கையான மல்லிகை பூ போல இருந்ததுள்ளது. இதை சுரேகா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பார்ப்பதற்கு நிஜமான போலவே இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.