Categories
இந்திய சினிமா சினிமா

‘கே ஜி எஃப்’ பட இயக்குனரை கலாய்க்கும் நெட்டிசன்கள்…. எதற்காக தெரியுமா..?

கே ஜி எஃப் பட இயக்குனரை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவிற்கு தீர்வாக தற்போது தடுப்பூசி இருக்கிறது. ஆகையால் பலரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் தனக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.

அப்போது அவர் ஊசி போடுவதைப் பார்க்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் சினிமாவில் ஹீரோயிசத்தை உச்சத்திற்கு கொண்டு சென்று 100 பேரை அடிக்கிற மாதிரி மாஸ் காட்டிய இயக்குனர், நிஜத்தில் ஊசி போடுவதை கூட பார்க்க முடியாதவரா என்று கலாய்த்து வருகின்றனர்.

Categories

Tech |