6 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியில் 9 கடைகள் இருக்கிறது. இதில் பேரூராட்சி பகுதியில் 14 கடைகளும், கிராமப்புறங்களில் 45 கடைகளும் என மொத்தம் 68 டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கின்றது. இவற்றில் முதல் கட்டமாக 8 டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டது.
இதனால் மதுபிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதற்கிடையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் மேலாளர் கேசவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பார்கள் திறக்கப்பட்ட நிலையில் அங்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை மேலாளர் கேசவன் பார்வையிட்டார். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றயும் இருக்க வேண்டும் என மேலாளர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி மதுஅருந்த வருபவர்களுக்கு கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கட்டாயம் கிரிமிநாசினி வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.