இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்த Never Have I Ever தொடரின் மூன்றாம் சீசன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் Mississauga என்ற பகுதியில் வசிக்கும் 19 வயதான மைத்திரேயி என்ற நடிகை, இலங்கையிலிருந்து கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தவர். இவர் நடிப்பில் வெளியான, Never Have I Ever என்ற நெட்ப்ளிக்ஸ் தொடர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது.
இத்தொடரில், இவர் தேவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த, இந்த தொடரின் மூன்றாம் சீசன் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் 2022 ஆம் வருடத்தின் கோடை காலம் அல்லது இலையுதிர் காலத்தில் இத்தொடரின் மூன்றாம் சீசன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.