Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி கூடம் என்றும் பாராமல்…… சமூகவிரோத செயல்…… CEOவிடம் பொதுமக்கள் மனு…..!!

தென்காசி அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு பாதுகாவலரை  நியமிக்க கோரி ஊர்மக்களும் ஆசிரியர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முன்னாள் யூனியன் தலைவரான சட்டநாதன் என்பவர் சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களுடன் சேர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் இந்த பள்ளியில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன வணிகவியல், பிரிவில் முதுகலை ஆசிரியர்கள் நிரப்பப்படவில்லை, இரவு நேரங்களில் பள்ளியை பாதுகாக்க பாதுகாப்பாளர் நியமிக்கப்படவில்லை .

நிரந்தர தலைமையாசிரியர் பலமுறை வலியுறுத்திய  பின்பும் இன்றளவும் நியமிக்கப்படவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வலியுறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் பெரும்பாலும் வணிகவியல் துறையை தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமப்படுத்தபடுகின்றனர்.

எனவே ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டுமென்றும், பாதுகாவலர் இல்லாததால் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் சில சமூக விரோத செயல்கள் பள்ளியில் வைத்து நடைபெறுவதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |