Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

புதிய ஆஃப்ரிக்கா ட்வன்- இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு …!!

ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய மாடலான ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வன் மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்து வைத்த ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடலானா ஹோண்டா சி.ஆர்.எஃப்.1100எல் வருகின்ற மார்ச் 5-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் அறிவித்துள்ளது. இதில்  1,084 சிசி என்ஜின் கொடுக்கப்படுள்ளது. இது 101 பி.ஹெச்.பி. பவர், 105 என்.எம். டார்க் செயல்திறன்  கொடுக்கும். இந்த வகை என்ஜின் அலுமினியம் சிலிண்டர் ஸ்லீவ், மேம்பட்ட கேசிங் கொண்டு 2.5 கிலோ எடை வரை குறைந்து இருக்கின்றது. இதோடு மெல்லிய ஃபிரேம் இருக்கும்.

மோட்டார்சைக்கிளின் எடை குறைந்துள்ளதால் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மோடில் ஒரு லிட்டருக்கு 20.4 முதல்  20.8 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் பெற்றுள்ளது. இந்த என்ஜின் நான்குவித செயல்திறன் ,  3 விதமான எலெக்டிரானிக் என்ஜின் பிரேக்கிங் , 7 நிலைகளில் ஹோண்டா செலக்டபில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் கொடுக்கப்படுகின்றது. இதோடு ஹோண்டாவின் வீலி கண்ட்ரோல் தொழில்நுட்பம் மேம்பட்ட ஃபேரிங் வடிவமைப்பு பெற்றிருக்கின்றது.

இதில் தொடுதிரை வசதியுடைய இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்,  ப்ளூடூத் , ஆப்பிள் கார்பிளே வசதி இருக்கின்றது.டிரைவிங் மோட்டை பொறுத்த வரை டூர், அர்பன், கிரேவல், ஆஃப்-ரோடு என நான்கு வகை டிரைவிங் மோட்களை பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 14.50 லட்சத்தில் தொடங்கி ரூ. 16.50 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது.

Categories

Tech |