ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர் பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பலன் பெறும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த மக்கள் எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் பலனடையும் வகையில் நிதியமைச்சர் Christian Lindner, ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மேலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியையும் சிறிது உயர்த்த தீர்மானித்திருக்கிறார்.
அதன்படி வரியை நேரடி முறையில் குறைப்பதற்கு பதில் வரியை செலுத்தக்கூடிய வருமான வரம்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, தற்போது வரை 10,347 யூரோக்கள் சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரியை செலுத்த வேண்டாம் என்று இருந்தது. ஆனால் இனிமேல் 10,632 யூரோக்கள் சம்பளம் வாங்குபவர்கள் வரை வருமான வரியை செலுத்த தேவையில்லை.
மேலும் வரும் 2024 ஆம் வருடத்தில் 10, 932 யூரோக்கள் சம்பளம் வாங்குபவர்களும் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று மாற்றப்படும். இது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி இரண்டுக்கும் அதிகமான குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் முதல் இரு குழந்தைகளுக்கு எட்டு யூரோக்கள் அதிகரிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு 227 யூரோக்களாக உயர்த்தப்படவிருக்கிறது.