Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு!

தமிழக சட்டப்பேரவையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு வருகிறார். அதன்படி தமிழக சட்டப்பேரவையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை,

  • தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
  • சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வுகளை நடத்த
    ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தில் மழலையர் காப்பகம் ரூ.4.27 லட்சம் அமைக்கப்படும்.
  • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்திற்கு புதிதாக வாகனங்கள் வழங்க ரூ. 1.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்திற்கு கணினிகள் மற்றும் துணை மின்னணு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சியாளர்கள் பயன்பாட்டிற்காக 6 சிற்றுந்துகள் வாங்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Categories

Tech |