Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் புதிய அறிவிப்பு….டிக் டாக் நிறுவனத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசு..!


அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவினால் டிக் டாக் நிறுவனம் ஸ்தம்பித்துள்ளது.

அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம்சாட்டி தடை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 45 நாட்களுக்குள் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க பதிப்பை வேறு நிறுவனத்திற்கு விற்க்க வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவின் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிக் டாக் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடைவிதிக்கும் உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.

சமீபத்தில் டிக் டாக் நிறுவனத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “90 நாட்களுக்குள் அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீடுகளுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட் டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள அனைத்து வகையான அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் முதலீடுகள் என்று அனைத்தையும் விலக்கிக்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்காவின் இந்த திடீர் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பினை டிக் டாக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து கூறுகையில் ” அமெரிக்க டிக் டாக் செயலியில் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்களும், ஆயிரக்கணக்கான வங்கி பங்காளர்களும், 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களும் உள்ளனர். எங்கள் நிறுவனத்துடன் பங்கு வைத்திருக்கும் அனைவருக்கும் நிலைமையை எடுத்துரைத்து சரியான தீர்வை முடிவுசெய்ய, அமெரிக்க அரசு நிர்ணயித்த கால அவகாசத்திற்குள் சாத்தியமற்றது.

அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளதாக” டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா டிக் டாக் செயலுக்கு முதல்முதலாக தடை விதித்திருந்தாலும் சீனாவுடன் டிஜிட்டல் போர் புரிவதாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் அமைகிறது.

Categories

Tech |