Categories
தேசிய செய்திகள்

புதிய அறிவிப்புகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம், பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் – பிரதமர் மோடி!

புதிய அறிவிப்புகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம், பொருளாதாரத்தை மேம்பாட்டிற்கு உதவும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் சிறு, குறு தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை மக்கள், விவசாயிகள், மீனவர்கள், கனிமங்கள், நிலக்கரி உற்பத்தி, ராணுவ தளவாட உற்பத்தி, மின் விநியோகம் விண்வெளி அணுசக்தி துறை, 100 வேலை திட்டம், கல்வி உள்ளிட்டவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி புதிய அறிவிப்புகள் மருத்துவம், சுகாதாரம், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும். தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தவும், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும். மாநிலங்களுக்கான அறிவிப்புகள் சிறந்த உத்வேகம் அளிக்கும் என கூறியுள்ளார்.

Categories

Tech |