Categories
உலக செய்திகள்

இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும்..!உலோக கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா… நுண்ணுயிர் ஆய்வாளர் புதிய கண்டுபிடிப்பு..!!

தொழிற்சாலை கழிவுகள் போன்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் உலோக கழிவுகளை அழிக்கும் வகையில் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் சுற்றுப்புற சூழலுக்கு தொழிற்சாலை கழிவுகள் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த வகையில் உலோக கழிவுகளை சீர்படுத்த உலோகத்தை சாப்பிடும் பாக்டீரியா கொண்டு சிலியை சேர்ந்த நுண்ணுயிர் ஆய்வாளரான நாடாக் ரியல்ஸ் (33) ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்படி ஒரு சுரங்க ஆலையில் தாமிரம் பிரித்தெடுத்தலை முன்னேற்ற நுண்ணுயிர்களை பயன்படுத்தி சோதனை நடத்தியுள்ளார். அந்த சமயத்தில் தான் உலோக கழிவுகளை சாப்பிடும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளார். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் விளைவாக புதிய தொழில்நுட்பத்தை விரைவில் வெற்றிகரமாக செயல்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் இந்த பாக்டீரியா நுண்ணுயிரியல் மற்றும் ரசாயன சோதனைகள் மூலம் சுற்றுச்சூழல் அல்லது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரியல்ஸ் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் தாமிரம் அல்லது பிற கனிமங்களில் பெரிய அளவிலான பிரித்தெடுத்தல் பணிகளை செய்ய இயலும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரியல்ஸ் அந்த தொழில் நுட்பத்திற்கான காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |