பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய அவெஞ்சர் A.P.S மோட்டார்சைக்கிளின் இந்திய விலையை வெளியிட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்கனவே 180 CC கொண்ட அவெஞ்சர் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அதற்குப் பதிலாக 160 CC மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடலில் கூடுதல் சிறப்பம்சமாக A.P.S வசதி வழங்கப்படுகிறது. குரூயிஸ் மாடலில் 220 CC மாடலைத் தொடர்ந்து 180 CC மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. அதேபோல் இந்த மாடலிலும் பெருமளவு வித்தியாசம் இல்லாததால் 180 CC மாடலுக்குப் பதிலாக 160 CC கொண்ட அவெஞ்சர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த என்ஜின் 15.5 P.H.P திறனை 8,500 R.P.M வேகத்திலும் 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 R.P.M வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 180 CC மாடலுக்கும், இந்த 160 CC மாடலுக்கும் பெருமளவு வித்தியாசம் இருக்காது. டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்பர் பின்புறம் கொண்டது. இந்நிலையில் இந்தியாவில் இதன் விலை ரூ.81,036 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.