வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 23ஆம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும் எனவும், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரத்தில் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.