வரும் 29ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது தமிழக பகுதிக்கு வருமா ? அல்லது வடக்கு நோக்கி நகர்ந்து பங்களதேஸ் பகுதிக்கு செல்லுமா ? என்று தெளிவான தகவல் கொடுக்கவில்லை.
இன்னும் ஓரிரு நாட்களுக்குப் பிறகு அதனுடைய பாதை எப்படி இருக்கிறது ? நம்மளை நோக்கி வருமா அல்லது வடக்கு நோக்கி போகுமா ? என வானிலை அறிவிக்கும். இதனால் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.