இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது SUV-ன் மாடலின் புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பி.எம்.டபுள்யூ X7 சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 98.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்துள்ளனர். இந்த கார் இரு வேரியண்ட்களில் அதாவது எக்ஸ்டிரைவ் 40ஐ (CBU) மற்றும் எக்ஸ்டிரைவ் 30(DPE Signature) என இரு வகையில் கிடைக்கிறது.
X5 SUV மாடலுக்கு அடுத்த வேரியண்ட்டாக இந்த பி.எம்.டபுள்யூ X7 கார் அறிமுகமாகியுள்ளது. மேலும் இதுவே 7 பேர் அமரக்கூடிய முதல் பி.எம்.டபுள்யூ வாகனமாகவும் இந்த புதிய X7 இருக்கிறது. இந்த கார் இந்திய சந்தையில் எஸ்.யு.வி. சி.கே.டி. முறையில் உற்பத்தி செய்யபடுகிறது. 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் தான் பி.எம்.டபுள்யூ. X7 எக்ஸ்டிரைவ் 40ஐ (CBU) மாடலில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 335 bhp பவர், 450 nm டார்க் செயல்திறனை வழங்குகிறது.
இதேபோல் 30(DPE Signature) எக்ஸ்டிரைவ் வேரியண்ட்களில் 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 260 bhp பவர், 620 nm டார்க் செயல்திறனை வழங்குகிறது. இந்த இரு வேரியண்ட்களில் உள்ள என்ஜின்களிளும் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேட்டெட் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பி.எம்.டபுள்யூ எக்ஸ்7 கார் மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.