தனியே தவித்த பச்சிளம் குழந்தையை மீட்டு காவல் துறையினர் விசாரணை
மாமல்லபுரத்தில் உள்ள கடம்பாடி மாரியம்மன் கோவிலின் பின்புறம் வெகுநேரமாக பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்துள்ளது. கோவிலுக்கு வந்தவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்ட திசை நோக்கி சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது குழந்தையின் அருகில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து மாமல்லபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தை யாருடையது என தெரியாத காரணத்தினால் செங்கல்பட்டு குழந்தைகள் காப்பக அலுவலர்களிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளார். பச்சிளம் குழந்தையின் பெற்றோர் யார் எனவும் குழந்தை கடத்தப்பட்டு வீசப்பட்டதா எனவும் வெவ்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.