கத்தாரில் பிறந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்று ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலக நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், கொரோனோ பல வகைகளாக உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கத்தார் நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு பிறந்த மூன்று வாரங்களில் பச்சிளம் குழந்தை பலியாகியுள்ளது.
அந்த குழந்தைக்கு மருத்துவரீதியாக கொரோனாவிற்கான எந்த அறிகுறிகளும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழக்கும் இரண்டாவது குழந்தை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.