மொரீசியஸ் நாட்டில் விமான கழிப்பறையில் ஒரு பெண், குழந்தை பெற்று அங்கேயே விட்டுசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொரீசியசில், ஏர் மோரீசியஸ் ஏர்பஸ் ஏ 330-900 என்ற விமானத்தின் கழிப்பறையில் பையால், சுற்றப்பட்ட நிலையில், பச்சிளம் ஆண் குழந்தை கிடந்திருக்கிறது. இதனைப்பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே குழந்தையை எடுத்துசென்று, அதன் தாய் குறித்து விசாரணை செய்தனர்.
எனினும், யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது மடகாஸ்கர் நாட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். எனவே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் தொடர்ந்து தான் எதுவும் செய்யவில்லை என்று கூறி வந்தார்.
எனவே அதிகாரிகள், மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில், அவர் சமீபத்தில் குழந்தை பெற்றதற்கான அடையாளம் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.