திருமணிமுத்தாறு பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து புதியதாக கட்டுமானப் பணி நடைபெற்று தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து பேருந்து நிலையம் அருகில் இருக்கும் திருமணிமுத்தாறு ஆற்றை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதன் பின் ஆற்றின் இருபுறமும் வேலிகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணிமுத்தாறு ஆற்றல் அமைந்திருந்த 2 பாலங்கள் ஜே.சி.பி எந்திரம் பயன்படுத்தி அகற்றப்பட்டுள்ளது. அதாவது சேலம் ஆட்சியர் அலுவலகம் வழியாக பழைய பேருந்து நிலையத்திற்கு செல்ல இந்த பாலமானது பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கு பதிலாக வேறு தற்காலிக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.