பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக கார் ஒன்றை வடிவமைத்துள்ளது.
பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக பேபி 2 என்ற எலக்ட்ரிக் காரை புதிதாக வடிவமைத்து அதனை வெளியிட்டுள்ளது. இந்த காரை குழந்தைகள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்றும், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், 25 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் கழற்றி மாற்றக்கூடிய இரும்பு லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளதாகவும், இதனுடைய தொடக்க விலை 26.6 லட்சமாக நிர்ணியக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்காக 26.6 லட்சத்தை யாரேனும் செலவு செய்வார்களா? அப்படி செலவு செய்பவர்கள் எப்படி பணத்தை விரையம் செய்பவர்களாக இருப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.