காசோலை மோசடியை தடுக்க வங்கிகளில் positive pay என்ற பாதுகாப்பு முறை அமலாக உள்ளது.
வங்கி என்பது நம்முடைய பணப் பரிமாற்றத்திற்கும் கடன் பெறுவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதை போன்று காசோலை வாயிலான மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வகையில் போலியான காசோலைகளை தயாரித்து அதன் மூலம் நிதி மோசடி செய்து வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காசோலை பரிவர்த்தனையை பாதுகாப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் காசோலை மோசடிகளை தடுக்க 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கிகளில் “Positive Pay” என்ற புதிய பாதுகாப்பு முறை அமலாக உள்ளது. அதன்படி காசோலை வழங்குவோர், எண், தொகை, நாள், அதனை பெரும் நபர், காசோலையின் முன்பின் பக்க படத்தை வங்கிக்கு அனுப்ப வேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான காசோலை விவரங்களை சரிபார்த்த பிறகே, வங்கிகள் தொகையை வழங்கும்.