Categories
அரசியல் தேசிய செய்திகள்

கோவா மாநில புதிய முதல்வர்…… இன்று இரவு 11 மணிக்கு தேர்வு……!!

கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று இரவு 11 மணிக்கு பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக சிகிக்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் நேற்று  உயிரிழந்துள்ளார்.

Image result for பிரமோத் சாவந்த்

இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி இன்று ஒருநாள் நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கபட்டது. கோவா மாநிலத்தில் 7 நாள் துக்கம் அனுசாரிக்கப்படுகின்றது . மனோகர்  பாரிக்கரின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இன்று இரவு 11 மணிக்கு முதல்வராக பதவியேற்றுக் கொள்ள இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |