தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழக அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளராக இருந்தார். இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி நீட்டிப்பு காலம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.