அபுதாபியில் புதிய சிவில் சட்டம் ஒன்று முஸ்லீம் அல்லாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
அபுதாபியில் புதிய சிவில் சட்டம் ஒன்று முஸ்லீம் அல்லாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனமான “வாம்” கூறுகையில் வாரிசுரிமை, விவாகரத்து, குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை கையாளும் வகையில் அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவர்களுக்காக புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய நீதிமன்றமும் இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக விரைவில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த நீதிமன்றத்தில் அரபி மற்றும் ஆங்கில மொழிகள் அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அபுதாபியில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் இந்த புதிய சட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.