புதுவை முதல்வர் நாராயணசாமி புதிய வேளாண் சட்ட நகலை கிழித்து எரிந்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண்சட்ட மசோதாவை எதிர்த்து புதுவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் புதுவை அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இதில் புதுவை முதல்வர் நாராயணசாமியும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
அப்போது அவர் புதிய புதிய வேளாண் திட்டங்கள் தொடர்பாகவும், புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடு குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார் அதேபோல் புதுவை மாநிலம் தமிழகத்தோடு இணைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்து வருவதால், இந்த முயற்சியை ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒருவேளை புதுச்சேரி தமிழகத்தோடு இணைத்தால் புதுவையின் தனித்தன்மை போய்விடும் என்ற அவர் திடீரென மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.